சோலைத் தென்றலாய்
வீசிப் போகின்றாய்

சுகந்தம் தருவதாய்
சுற்றி வருகின்றாய்

காலைப் பனியாய்
சில்லிட வைக்கின்றாய்

தூறல் மழையாய்
என்னை நனைக்கின்றாய்

மாலை நிலவாய்
மனதை நிறைக்கின்றாய்

மழலை மொழியாய்
தமிழை நனைக்கின்றாய்

மனதுக்கு நிறைவாய்
மணமேடை வருகின்றாய்

மாங்கல்யம் நான் சூட
மனையாள் ஆகின்றாய்

கணவா என்றெனைக்
கட்டி அணைக்கின்றாய்

சேலைக் குழந்தையாய்
என்மடி தவழ்கின்றாய்

என் பாலை நிலத்தில்
பயிர் வளர்க்கின்றாய்

காலை விடியுமுன்
கண் விழிக்கின்றாய்

என் வீட்டு முற்றத்தில்
கோலம் போடுகின்றாய்

விடிகாலை விடிந்ததும்
தேனீர் தருகின்றாய்

நான் கண்விழிக்கையில்
எங்கு செல்கின்றாய்?

1 Your Comments:

  1. தங்களின் இந்த கவிதையை நெல்லை தமிழில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.

    வலை முகவரி
    http://nellaitamil.com

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net