உள்ளூறும் உணர்வை எல்லாம்
சொல்லால் நான் வடிக்கவில்லை.

சொல்லில் நான் வடிப்பதென்றால்
கடலில் துளியையே இங்குரைப்பேன்.

சொல்லால் எது சொன்னாலும்
தலைவா உனக்குப் பிடிப்பதில்லை.

ஆதலால் நான் நேற்றுவரை
உனைப் புகழ்ந்து பாட நினைக்கவில்லை.

இருந்தும் ஏனோ இன்று
உனைப் பாடாமல் இருக்க
என்னால் முடியவில்லை.

இடம்மாறி வாழும் போதும்
இதயத்தில் தலைவா உன்னை
தினம் தோறும் சுமக்கின்றேன்.

தடம் மாறிப் போகா உன்னை
தலைவனாய் கொண்ட எந்தன்
உணர்வுகள் தொடுதே உன்னை

எங்கு தான் வாழ்ந்தாலும்
தாய்மடி தாங்கும் எண்ணம்
துளிகூடக் குறைந்ததில்லை.

என் நிலை மறந்த போதும்
உன்னை நான் மறப்பதில்லை.

கண்ணிமை கவிழும் போதும்
கரிகாலா!
கனவிலும் தழுவும் உன்னை
பாடாது இருக்க என்னால்
நினைத்தாலும் முடியவில்லை.

எல்லாம் புரக்கும் இறைவா!
வல்ல தலைவா!
வாழ்க பல்லாண்டு.

3 Your Comments:

 1. Easan says:
  This comment has been removed by the author.
 1. very nice,
  yarukkum kidaikatha thlaivar enkalukku, naan iraivanidam ketpathellam enthu uyirai vendumeral eduththukkol anal enkal thalaivaritku oru anvalavenum thunpam kodukathe enru.

 1. கவிதை அழகாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.
  மேலும் உங்களை ( திறமைகளை) வளர்த்துக்கொள்ளுங்கள்.

  தயவு செய்து (word verification ) ஐ நீக்கி விடுங்கள் அது இன்னொரு பதிவு போடுவ்துபோல

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net