சூரியத் தீயை
நீர் கொண்டு அணையுங்கள்

வானைச் சுருக்கி
கைகளில் அடக்குங்கள்

புயலைப் பிடித்து
சிறையில் அடையுங்கள்

கடலை அள்ளி
நிலவில் நிறையுங்கள்

சுட்டு விரலில் வைத்து
பூமியைச் சுற்றுங்கள்

இத்தனையும் முடித்த பின்
தமிழனிடம் வாருங்கள்

அவன் விடுதலை நெருப்பை
அணைக்க முயலுங்கள்

அப்போதும் தோற்கும்
உங்களின் அடக்குமுறை

விடுதலை நெருப்பில்
விரல் வைத்து வெந்தவர்களே!

எங்களின் தேசத்தில்
முகமூடி போட்டு
முகம் வைத்தவர்களே!
கேளுங்கள்..

மாவீரர் தேசம்
எதையும் இழக்கும்.
மானத்திற்காக..

மானத் தமிழர்
தங்களையே துறப்பர்.
ஈழத்திற்காக..

காலமும்
களங்களும்
உங்களுக்குப்
பதில் சொல்லும்.

தமிழும்
ஈழமும்
நிச்சயம் வெல்லும்.

1 Your Comments:

  1. ஈழத்தமிழா! தமிழ்நாட்டுத்தமிழனை ஒரு போதும் நம்பாதே. தமிழும் ஈழமும் நிச்சயம் வெல்லும். ‍ ‍ கருநாடகத்தமிழன்

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net